Balaji Natarajan's Words

"Try to do something, otherwise just keep quiet."

காதல் சொல்ல வந்தேன்!


முக்காலத்தின்
காதல் சின்னம்…
வண்டுகள்
முகராத ரோஜாவை…
வெடுக்கென பிடுங்காது
கொண்டுவந்தேன்.
இதயமோ நூறு மயில்
வேகத்திலே ஓடிகொண்டிருக்க…
கால்கள் ஆமையின் சீடனாய்
நடைப்போட்டு சென்றது.
தினம் பார்த்த தெருவாயினும்,
அவள் வருகைக்கு
பின் மட்டும்…
திருவிழா தோரணமாய்
அழகேறி நிற்கிறதோ.
ஊரூராய் பலர்
பலவிதமாய் காதல் கொள்ள- நான்
ஊர்ந்து போகும் பேருந்தில்
காதல் கொண்டேன்.
விழிகளின் பேச்சை
செவிகள் கேட்டதோ
இதழ்கள் புன்னகை மழை பொழிகிறது!
இன்று,
அவள் விழி கூறிய பதிலை
இதழ் கூறுமா…
இதமாய் உணர்ந்த காதலில்
இடி வந்து தாக்குமா.
காதலில் மட்டும்
பெண்களை… பெண்களே நம்புவதில்லை
சொல்லாது தவிக்கும்
ஆண்களின் காதலும்,
சொன்னவுடன் ஏற்கும்
பெண்களின் காதலும்
நிரந்தரமாய் அமைந்ததில்லை!
அதனால் தான்…..
என் காதலை இன்று,
என் காதலியின்
கல்லறையில் சொல்ல வந்தேன்!

From Collection of “Words of Benatan”

My Facebook acc link

4 months ago - 1 -

Creativity

Creativity isn’t a work to learn… it’s a precious gift of god for us. keep it and grow it well.

நினைவுகள்…!


கதிரவன் மறைந்த போதும்
வாடாத மாலை ரோஜா…
கல் எறியப்படிருந்தாலும்
கலங்காத தண்ணீர் குளம்…
ஓயாத ஓட்டதின் நடுவே…
தாகம் தீர்க்கும் நீர் பந்தல்…
அயராத உழைப்பின் இடையே
சோர்வை நீக்கும் தேநீர் இடைவேளை…
காயபட்டிருக்கும் மனதிற்கு
காசில்ல இலவச மருந்து…
தூய உள்ளம் கொண்டோர்க்கு
தாலாட்டு இசைக்கும் தாய் குரல்…
பதினெட்டு வயதிலே
குறைவில்லா புதையல்…
நெஞ்சிலே புதைவுற்றிருக்கும்
உயிருள்ள உணர்வுகள்…
நினைவுகள்…!

By, Balaji Natarajan

Collection of Benatan word’s